காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு கர்நாடகா அரசு காவிரியில் உரிய நீரை வழங்க கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டும். காவிரி பிரச்சினையை முன்னிறுத்தி கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சேக்அலாவுதீன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள் கோவி.அசோகன், அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் அருள்நேசன் நன்றி கூறினார்.