வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தி.மு.க-வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு


வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தி.மு.க-வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 March 2024 1:21 PM IST (Updated: 31 March 2024 1:21 PM IST)
t-max-icont-min-icon

கடந்த முறை சைக்கிள் சின்னத்திற்காக போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காவிரி மேலாண்மை கூட்டம் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. கூட்டணிக்காக பெங்களூரு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீருக்காக பெங்களூர் செல்லவில்லை.

தேர்தல் முறையாக நடக்க வேண்டும். தேர்தல் ஆணையம் முறையாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் விதிமீறலை தொடங்கிவிட்டன.ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து வாக்கு வாங்க நினைக்கிறார்கள். மக்கள் தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது இந்தியை பற்றி பேசுகிறார்கள்.

மக்கள் ஏமாறமாட்டார்கள். நிதி அமைச்சர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணம் எண்ணிடம் இல்லை என்று கூறியது அவரது நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை குறிக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வரும் நாட்களில் மேலும் பலமாக இருக்க வேண்டும். கடந்த முறை சைக்கிள் சின்னத்திற்காக போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.

தற்போது முறையான நேரத்தில் சரியான பணியின் காரணமாக சைக்கிள் சின்னம் கிடைத்து இருக்கிறது. 9 வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது கிடைத்து உள்ளது. முறையாக பணிகள் செய்யாததன் காரணமாக சின்னம் கிடைக்கவில்லை என்பதால் அரசியல் காரணம் கூறுவதை பொதுமக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க.வுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. ஸ்ரீபெரும்புதூர் உட்பட தி.மு.க. பிரபலங்கள் இருக்கும் தொகுதியில் எல்லாம் எங்களது வெற்றி உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story