கவர்னரை மாற்றி விடாதீர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தற்போது இருக்கும் கவர்னரை மாற்றி விடாதீர்கள் என பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. வழக்கறிஞர் புருஷோத்தம்மன் இல்ல திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
தற்போது இருக்கும் கவர்னரை மாற்றி விடாதீர்கள் என பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுக்கிறேன். குறைந்தபட்சம் மக்களவை தேர்தல் வரையிலாவது கவர்னரை மாற்றி விடாதீர்கள்.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். அதற்காக அயராது உழைக்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகிவிட்டது. இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.
Related Tags :
Next Story