பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை


பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
x

பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ள என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க வந்துள்ளேன். ஜெயலலிதா போன்று நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது பேச்சுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story