முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை


முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
x

காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க விழா வரும் 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story