சென்னையில் நாளையும் மின்சார ரெயில் சேவை ரத்து...!


சென்னையில் நாளையும் மின்சார ரெயில் சேவை ரத்து...!
x

கோப்புப்படம் 

கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதற்கிடையே, புயல், கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் இன்று காலை 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சேத விவரங்களை அறிந்த பின்னர் மின்சார ரெயிலை மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ரெயில்வே தெரிவித்து இருந்தது.

அதன்படி இன்று காலை முதல் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சிறப்பு ரெயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. ரெயில்கள் செல்லும் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொறுமையாக ரெயில்களை இயக்குமாறு லோகோ பைலட்டுகளுக்கு உத்தரவிட்டுருந்தது. ஆனால் தொடர் கனமழை காரணமாக ரெயில்கள் சரிவர இயக்கப்படவில்லை.

இந்நிலையில் நாளையும் புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story