நெல்லையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானை மீட்பு - வனத்துறை நடவடிக்கை


நெல்லையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானை மீட்பு - வனத்துறை நடவடிக்கை
x

உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு போதிய சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

நெல்லை,

திருநெல்வேலி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தனி நபர் ஒருவர் உரிய அனுமதியின்றி 'சுந்தரி' என்று பெயரிடப்பட்ட பெண் யானையை வளர்த்து வந்ததுடன், அதனை பொது இடங்களில் வைத்து பிச்சை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தொண்டு நிறுவனம் சார்பில் வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த யானைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு போதிய சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த நபரிடம் இருந்து சுந்தரி யானையை அதிரடியாக மீட்டனர். தொடர்ந்து அந்த யானை திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.Next Story