மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் செல்லும் விமானம் ரத்து


மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் செல்லும் விமானம் ரத்து
x

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் செல்லும் விமானம் செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா சிலிக்குரி விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 154 பயணிகள் விமானத்தில் ஏறி தயாராக இருந்தனர். ஆனால் சிலிக்குரியில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தரையிறங்க முடியாது என்று தகவல் கிடைத்ததால் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விமானத்தில் இருந்த 154 பயணிகளும் கீழே இறக்கி விடப்பட்டனர். மேலும் சிலிக்குரிக்கு நாளை செல்லும் விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story