பஸ்சில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு அடி-உதை - 8 பேர் மீது வழக்கு


பஸ்சில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு அடி-உதை - 8 பேர் மீது வழக்கு
x

திருவள்ளூரை அருகே பஸ்சில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த சித்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகன் ராஜ்குமார் (வயது 22). இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு பஸ்சில் திருவள்ளூரில் இருந்து சித்தம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ராஜ்குமார் பஸ் டிரைவரிடம் பேசிக் கொண்டு வந்தார். இதைக்கண்ட சித்தம்பாக்கம் பகுதி சேர்ந்த யுகேஷ் குமார் தன்னை பற்றி தான் தவறாக பேசுகிறார் என எண்ணி அவரை தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த யுகேஷ் குமார் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து ராஜ்குமாரை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுகேஷ் குமார் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story