திமுக இளைஞர் அணி மாநாடு: வாரிசுகளுக்கே அரியணையா? - கவர்னர் தமிழிசை விமர்சனம்


திமுக இளைஞர் அணி மாநாடு: வாரிசுகளுக்கே அரியணையா? - கவர்னர் தமிழிசை விமர்சனம்
x
தினத்தந்தி 22 Jan 2024 8:38 AM IST (Updated: 22 Jan 2024 8:41 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது.

சென்னை,

திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு, சேலம் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கவர்னர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

உரிமை மீட்பு மாநாடாம்? காவிரி உரிமையை தொலைத்தது யார்? கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்? கல்வி உரிமையை பறிகொடுத்தது யார்? 'நீட்' தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில்? உரிமைகளை தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம். வாரிசுகளுக்கே அரியணையா? இவர்களிடம் இருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story