கனமழை எதிரொலி; வேலூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு


கனமழை எதிரொலி; வேலூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Sept 2023 6:49 AM IST (Updated: 21 Sept 2023 2:13 PM IST)
t-max-icont-min-icon

கனமழை எதிரொலியாக வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் விடுமுறை அறிவித்து உள்ளார்.

வேலூர்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதில், வேலூரில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, வேலூரில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, கனமழையை முன்னிட்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

எனினும், 6-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


Next Story