சென்னையில் கனமழை; விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்தன.
சென்னை,
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய ஐதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு, கவுகாத்தி, கோவா, சிங்கப்பூர், கோவை, நாக்பூர் உள்ளிட்ட 12 விமானங்கள், பலத்த மழை மற்றும் காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்தன.
பின்னர் வானிலை சற்று சீரானதும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. இதே போல் சென்னையில் இருந்து டெல்லி, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 20 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
Related Tags :
Next Story