கனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை


கனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை
x
தினத்தந்தி 19 Dec 2023 7:01 AM IST (Updated: 19 Dec 2023 7:48 AM IST)
t-max-icont-min-icon

பல இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தனித்தீவு போல கிராமங்கள் காட்சி அளிக்கின்றன.

நெல்லை,

தென் மாவட்டங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது.

குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தனித்தீவு போல கிராமங்கள் காட்சி அளிக்கின்றன.

இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கு பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story