புரட்டி எடுத்த கனமழை...குளிர்ந்த தமிழகம்..!


புரட்டி எடுத்த கனமழை...குளிர்ந்த தமிழகம்..!
x
தினத்தந்தி 19 Sept 2023 7:58 AM IST (Updated: 19 Sept 2023 8:01 AM IST)
t-max-icont-min-icon

நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னை,

நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னயில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அண்ணா சாலை,ராயப்பேட்டை,நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதை போலவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம், சின்னசேலம்,ரிஷி வந்தியம் ஆகிய பகுதிகளிலும்,திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதை போலவே வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

இவ்வாறு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது .இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story