விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!


விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!
x

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

கன்னியாகுமரி,

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் நேற்று (சனிக்கிழமை) வார விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.

அதேபோல் இன்று ஞாயிறு விடுமுறை என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். சூரிய உதயத்தை காண சன் ரைஸ் பாயிண்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story