காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கூறுகையில்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளின் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமான விசாரணை மூலம் முடித்து குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல்செய்து கோர்ட்டு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஓராண்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 568 நபர்களில் இதுவரை 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

49 நபர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்தும், 343 நபர்கள் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஓராண்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும், பிணையத்தை மீறி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 26 நபர்களை ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 234 நபர்களை சிறையில் அடைத்தும் மொத்தம் 779 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story