தூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய பெண் மற்றும் குழந்தையை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய பெண் மற்றும் குழந்தையை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியை சேர்ந்த இசக்கியம்மாள் (வயது 25) என்பவர் தனது 3½ வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. இதில் இசக்கியம்மாள் மற்றும் குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் காரில் வந்தார். விபத்தை பார்த்தவுடன் காரில் இருந்து இறங்கிய அவர் பலத்த காயங்களுடன் இருந்த இசக்கியம்மாள் மற்றும் குழந்தையை மீட்டார். பின்னர் தனது காரிலேயே அவர்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். இதை அறிந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டை வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story