18-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா


18-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா
x

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

சென்னை,

கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா வருகிற 18-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

1 More update

Next Story