கள்ளக்குறிச்சி விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு


கள்ளக்குறிச்சி விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு
x

கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து ஏராளமானோர் பலியான சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., பா.ம.க. சார்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்தநிலையில், விஷ சாராய சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பா.ஜனதாவைச் சேர்ந்த வக்கீல் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை, அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்துள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர், இந்த வழக்கை வருகிற 11-ந்தேதி மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

1 More update

Next Story