ராகுல் காந்தி அழைப்பை ஏற்று தேர்தல் பிரச்சாரத்திற்கு கர்நாடகா செல்ல கமல்ஹாசன் திட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மே முதல் வாரம் கர்நாடகா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனை ஏற்று கமல்ஹாசன் மே முதல் வாரம் கர்நாடகா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story