தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல்ஹாசன் திட்டம்


தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல்ஹாசன் திட்டம்
x

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கட்சியினரை கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார். "சீரமைப்போம் தமிழகத்தை" என்கிற முழக்கத்தோடு பல கட்டங்களாக சுற்றுப் பயணம் மேற் கொள்ள இருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்தை கட்சியின் அடித்தளம் வலுவில்லாமல் இருக்கும் பகுதிகளில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கமல்ஹாசன் தனது பேச்சின் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்பது பற்றி கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இதன் மூலம் கமல்ஹாசன் தனது அதிரடி அரசியல் சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்க உள்ளதாக கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


Next Story