தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு


தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2024 7:56 AM GMT (Updated: 23 Feb 2024 7:57 AM GMT)

தஞ்சையில் நாளை மகாமகம் விழா நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். இவ்விழாவின்போது பல பகுதிகளில் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த மகாமகம் விழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் மாகாமகம் திருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறையை கலெக்டர் அறிவித்துள்ளார்.


Next Story