மதுரையில் பழ.நெடுமாறனுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


மதுரையில் பழ.நெடுமாறனுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 30 Oct 2023 9:38 AM GMT (Updated: 30 Oct 2023 9:45 AM GMT)

மதுரையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார். இன்று காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பசும்பொன் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் மதுரையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் பழ. நெடுமாறனின் குடும்பத்தினர் இருந்தனர்.


Next Story