திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு ஆண் சாவு
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் - புட்லூர் ரெயில்நிலையங்களுக்கிடையே நேற்று முன்தினம் இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. உடலில் கத்திரிப்பூ போட்ட முழுக்கைச் சட்டையும், பிரவுன் கலரில் பேண்ட்டும் அணிந்திருந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருவள்ளூர் ரெயில்வே போலீசார் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story