மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தியாகி சங்கரய்யா காலமானார்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தியாகி சங்கரய்யா காலமானார்
x
தினத்தந்தி 15 Nov 2023 5:04 AM GMT (Updated: 15 Nov 2023 5:05 AM GMT)

தியாகி சங்கரய்யா 102வது வயதில் காலமானார்.

சென்னை,

சுதந்திரபோராட்ட தியாகி சங்கரய்யா (வயது 102). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக தியாகி சங்கரய்யா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தியாகி சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

3 முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியுள்ள தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழகஅரசு கவுரவித்துள்ளது. தியாகி சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story