சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி, நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 8-11, மாலை 5-8 ஆகிய நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story