சாலையில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்
ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னை
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் அருண் ராமலிங்கம். இவர் நேற்று இரவு தியாகராயநகரில் இருந்து மோட்டார் சைக்கிளை பழுது பார்ப்பதற்காக ஓட்டிச்சென்றார். ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சென்றபோது, ஒரு ஓட்டல் அருகே வந்ததும் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய ராமலிங்கம், வாகனத்தை விட்டு தள்ளி நின்றார். அங்கிருந்தவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும் மோட்டார்சைக்கிள் எரிந்து நாசமானது. இதில் அருண் ராமலிங்கத்துக்கு வலது கையில் மட்டும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
Related Tags :
Next Story