சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - கலெக்டர் அறிவிப்பு


சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - கலெக்டர் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களிலும் வேளச்சேரி, வேப்பேரி, தாம்பரம், போரூர், அடையாறு, துரைப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

அதேபோல ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. வாலாஜாபேட்டை, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் காலை முதலே லேசான மழை பெய்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story