"தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
x

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதுமான மருந்து கையிருப்பு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னரை நேரில் சென்று சந்தித்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மருந்துப் பற்றாக்குறை உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மருந்து கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் இருப்பதாகவும், மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை என்பது இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதுமான மருந்து கையிருப்பு உள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்து உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளதை அவர் உறுதி செய்து வருகிறார் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Next Story