திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்


தினத்தந்தி 16 Jan 2024 6:26 AM GMT (Updated: 16 Jan 2024 6:35 AM GMT)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்றும் வழிகாட்டியவர் வள்ளுவர் என்று மு.க ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்து இருந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இவ்வாறு பதிவிட்டுள்ளார். மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story