ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: அண்ணாமலை, டிடிவி தினகரன் வாழ்த்து..!


ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: அண்ணாமலை, டிடிவி தினகரன் வாழ்த்து..!
x

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பன்னீர்செல்வத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தமது மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story