சாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது


சாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
x

யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையத்தை அடுத்த தேவதானம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழை காரணமாக, சாஸ்தா அணைக்கு வரும் ஓடையில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ராஜபாளையம், சேத்தூர், முகவூர், தளவாய்புரம், செட்டியார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக இங்கு வருகின்றனர். இங்குள்ள மலையில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், மலைப்பாம்புகள், ராஜநாகம் என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.பொதுவாக மலை உச்சியில் வசிக்கும் யானைகள் இரவில் கூட்டம் கூட்டமாக வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வரும் யானைகள் அடிவாரப்பகுதிகளில் சுற்றிதிரிந்து விட்டு அதிகாலை நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும்.

ஆனால் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் சாஸ்தா கோவில் மலை அடிவாரத்தில் குட்டியுடன் யானை கூட்டத்தை காண முடிகிறது. இது விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் என பல்வேறு தரப்பினரும் சென்று வரும் பாதையாக உள்ளது.

எனவே யானைகள் முகாமிட்டு இருப்பதால் அனுமதி இல்லாமல் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.மேலும் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story