பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: தஞ்சை மாவட்டத்திற்கு 20ம் தேதி உள்ளூர் விடுமுறை


பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: தஞ்சை மாவட்டத்திற்கு 20ம் தேதி உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 15 April 2024 8:49 AM GMT (Updated: 15 April 2024 9:52 AM GMT)

பெரிய கோவில் சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி வருகிற 20ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்ரல் 20ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். மேலும் தஞ்சாவூரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story