பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!


பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
x
தினத்தந்தி 11 Jan 2024 9:50 AM IST (Updated: 11 Jan 2024 9:54 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை,

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 சிறப்பு பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்ல கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பேருந்துகள் இயக்கங்கள் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


Next Story