பா.ஜனதா தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வரும் காங்கிரசாருக்கு பரிசு - அண்ணாமலை


பா.ஜனதா தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வரும் காங்கிரசாருக்கு பரிசு - அண்ணாமலை
x

பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட வருபவர்களிடம், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் குறித்த புத்தகத்தை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

"தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

மேலும், வரும் அனைவருக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி தி.மு.க.வும், காங்கிரசும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற முடிவு செய்துள்ளோம்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

1 More update

Next Story