ராணிப்பேட்டை: சொகுசு கார்களில் குட்கா கடத்தல் - ராஜஸ்தானைச் சேர்ந்த 4 பேர் கைது

சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற 3 சொகுசு கார்களில் குட்காவை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து 3 சொகுசு கார்கள் மற்றும் அந்த கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





