சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது


சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 2 July 2023 11:51 AM GMT (Updated: 3 July 2023 6:30 AM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோசாலை பகுதியை சேர்ந்தவர் பாஷா (வயது 50). இவர் தற்போது திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் மூளை வளர்ச்சி குன்றிய 16 வயதுடைய சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தகாத படங்களை காண்பித்து கட்டாயப்படுத்தி கடந்த சில மாதங்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சைல்டு லைனிற்கு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் சைல்டு லைன் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஷாவை கைது செய்தனர்.


Next Story