திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி - வாலிபர் கைது


திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி - வாலிபர் கைது
x

திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கற்பக விநாயகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 27) இவர் காக்களூர் பைபாஸ் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 51 பேரிடம் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் போலீசார் வசந்தகுமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி அரசு அடையாள அட்டை, போலி பணியாணை, மடிக்கணிணி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story