கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்


கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
x

கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் 3 கட்டுகள் பணம் வைத்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்தபோது ரூ.1½ லட்சம் இருந்தது தெரியவந்தது. தான் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணம் என்றும் அவர் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்தில் சேர்த்தனர். மேலும் மதுபோதையில் இருந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.


Next Story