காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் திருட்டு


காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் திருட்டு
x

சென்னை சேத்துப்பட்டில் காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் ஜேக்கப். கட்டிட காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு, காரில் சென்னை சேத்துப்பட்டுக்கு வந்தார். அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் தனது நண்பருக்கு பிறந்த குழந்தையை பார்த்தார். பின்னர் காருக்கு திரும்பி வந்து பார்த்த போது, காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் பணத்தை காணவில்லை. இதுபற்றி சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் அபிஷேக் ஜேக்கப் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story