அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்


அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்
x

இந்த தங்கத்தை கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் யாரிடமும் எதுவும் இல்லை. இந்த நிலையில் பன்னாட்டு விமானமாக வந்து விட்டு உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் வயர்கள் செல்ல கூடிய அறை பகுதியை சோதனை செய்தனர். அதில் நம்பர் லாக்குடன் கருப்பு நிற டேப் சுற்றப்பட்ட சோப் வடிவில் ஒரு பொருள் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்த போது ரூ.2½ கோடி மதிப்புள்ள 4½ கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதை கடத்தி வந்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story