ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.20 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகள் கொள்ளை


ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.20 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 3 Oct 2023 1:01 PM IST (Updated: 3 Oct 2023 1:02 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.20 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆவலப்பள்ளி சாலை பகுதியில் வசித்து வருபவர் தில்லை கோவிந்தராஜ். இவர் நேற்று குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், அவர் சென்ற பின்னர் வீட்டின் கதவை உடைத்துள்ளனர்.

வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 லட்சம் ரொக்கம் , 12 சவரன் நகைகள் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்நிலையில் சுற்றுலா சென்று திரும்பி வந்த கோவிந்தராஜ், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் ஆட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story