காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்


காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
x

காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கிஷோர். காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ரெயில் மூலம் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பழையரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பள்ளி சீருடையுடன் பை மாட்டிகொண்டு வந்த 2 பள்ளி மாணவர்கள் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து கிஷோர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை தேடி வருகின்றனர்.


Next Story