தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதமடித்த வெயில்


தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதமடித்த வெயில்
x
தினத்தந்தி 4 April 2024 7:52 PM IST (Updated: 4 April 2024 8:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அவற்றில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவான இடங்கள் வருமாறு:-

ஈரோடு - 106.16 டிகிரி செல்சியஸ்

சேலம் - 105.2 டிகிரி செல்சியஸ்

கரூர் - 105.8 டிகிரி செல்சியஸ்

வேலூர் - 103.1 டிகிரி செல்சியஸ்

தர்மபுரி - 104.2 டிகிரி செல்சியஸ்

திருச்சி - 104.3 டிகிரி செல்சியஸ்

கோவை - 102.5 டிகிரி செல்சியஸ்

மதுரை - 102.56 டிகிரி செல்சியஸ்

திருத்தணி - 103.6 டிகிரி செல்சியஸ்

நாமக்கல் - 103.1டிகிரி செல்சியஸ்

திருப்பத்தூர் - 104.3 டிகிரி செல்சியஸ்

தஞ்சாவூர் - 101 டிகிரி செல்சியஸ்

சென்னை மீனம்பாக்கம்-101.76 டிகிரி செல்சியஸ்


Next Story