சிறுவனுக்கு கத்தி குத்து; 2 பேர் மீது வழக்கு


சிறுவனுக்கு கத்தி குத்து; 2 பேர் மீது வழக்கு
x

திருவள்ளூர் அருகே சிறுவனை கத்தியால் குத்திய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

சென்னை மதுரவாயல் காந்தி தெருவை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் ஞானப்பிரகாஷ் (வயது 17). இவர் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த சத்தரை பகுதியை சேர்ந்த தனது நண்பரான கார்த்திக் என்பவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். பின்னர் ஞானபிரகாஷ் தனது நண்பர்களான அபியூத், ஆகாஷ், சஞ்சய், பாலாஜி, கார்த்திக் நித்திஷ் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே பேசிக்கொண்டிருந்தார்.

அந்த சமயம் அபியூத்துக்கும், சஞ்சய்க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை ஞானபிரகாஷ், பாலாஜி ஆகியோர் தட்டிக்கேட்டு உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அபியூத், ஆகாஷ் ஆகிய 2 பேரும் ஞானப்பிரகாஷ், பாலாஜி ஆகியோரை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஞானப்பிரகாஷ் மப்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பெயரில் அபியூத், ஆகாஷ், ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story