குஜராத் மாநிலத்திலிருந்து சென்னைக்கு லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தல் - வடமாநில வாலிபர்கள் 6 பேர் கைது


குஜராத் மாநிலத்திலிருந்து சென்னைக்கு லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தல் - வடமாநில வாலிபர்கள் 6 பேர் கைது
x

குஜராத் மாநிலத்திலிருந்து சென்னைக்கு லாரியில் புகையிலை பொருட்களை கடத்திய வடமாநில வாலிபர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

குஜராத் மாநிலத்திலிருந்து பார்சல் லாரி மூலம் சென்னை வியாசர்பாடிக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ஆலோசனையின்படி எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற லாரியை சுற்றி வளைத்து சோதனை செய்த போது, அங்கு உள்ளே ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒரு டன் ஜர்தா புகையிலை மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் இருந்த சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 34), சகாயதாஸ் (24), சுனில்குமார் சோனி (45), தேவேந்திரசிங் (55) குமார்சிங் அணில்பாய் (36) உள்பட 6 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத் மாநிலத்தில் இருந்து லாரிகளில் ஜர்தா புகையிலைகளை மறைத்து கடத்தி வந்து மாதவரம், செங்குன்றம், மூலக்கடை, பெரம்பூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர்.

1 More update

Next Story