மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
x

பள்ளிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்களை எடுக்க செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

ள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.

இதனை தொடர்ந்து வரும் 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ஒருவார காலத்திற்கு போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் நாளை காலை 10.30 மணியளவில் அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்களை எடுக்க செய்ய வேண்டும் என்றும், விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது குறித்த விவரங்களை நாளை பிற்பகலில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைத்து வகை பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story