பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ரமலான் வாழ்த்து


பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ரமலான் வாழ்த்து
x
தினத்தந்தி 11 April 2024 10:19 AM IST (Updated: 11 April 2024 10:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகையையொட்டி, நடிகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை தெரிவித்து இருப்பதாவது;

"புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பா.ஜ.க சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story