தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ். திட்டத்தை கைவிட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story