"ஜி.எஸ்.டி.யில் இருந்து தமிழகம் பெறும் பங்கு மிகவும் குறைவு" - அமைச்சர் ரகுபதி
ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தாலும், அதிலிருந்து பெறப்படும் பங்குத்தொகை மிகவும் குறைவு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி திருக்கோகர்ணம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறி இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களோடு அருகருகே அமர்ந்து உணவருந்தினர்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும், ஆனால் அதில் இருந்து பெறப்படும் பங்குத்தொகை மிகவும் குறைவு எனவும் தெரிவித்தார். வணிகவரி, பத்திரப்பதிவு உள்ளிட்ட துறைகள் மூலம் கிடைக்கும் வருவாய் மூலமாக தான் தற்போது திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story